“பைசன்” படத்தின் OTT ரிலீஸ் அறிவிக்கப்பட்டது
துருவ் விக்ரமுக்கு திருப்புமுனையாக இருந்த படம் பைசன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள ‘பைசன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த மாதம் 17ஆம் திகதி வெளியான இப்படத்தின் OTT வெளியீடு குறித்து அறிவிப்பு வந்துள்ளது.
அதன்படி, வரும் 21ம் திகதி நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் பைசன் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 7 visits today)





