வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே இப்படி நடக்கும்! மகேஷ் பாபு
மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய மகேஷ் பாபு, “இந்தப் படம் ரிலீஸ் ஆனதும் இந்தியாவே எங்களை பார்த்து பெருமைப்படும்.
இது என்னுடைய கனவு திரைப்படம். வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே இப்படியான வாய்ப்பு கிடைக்கும். இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன்.
மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன். ‘வாரணாசி’ படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்” என்று தெரிவித்தார்.
இந்தப் படம் 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் திரையரங்குகிளல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ருத்ரா கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு நடிக்கிறன்மை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 3 visits today)





