லோகா படத்தில் மம்மூட்டி நடிப்பது உறுதியானது
துல்கர் சல்மான் தயாரிப்பில் டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பில் வெளியான படம் ‘லோகா சாப்டர் 1’.
சூப்பர் ஹீரோ கதையில், மலையாளத்தில் உருவான இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
இதன் அடுத்தடுத்த பாகங்கள் வரும்காலத்தில் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், லோகா படத்தின் ஏதாவது ஒரு பாகத்தில் வருங்காலத்தில் தனது தந்தை மம்மூட்டி நடிக்க வாய்ப்பு உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
மேலும், திட்டமிட்டதை விட 2 மடங்கு அதிகமாக லோகா பட்ஜெட் கூடியதாகவும் அதை அறிந்ததும் மம்மூட்டி பதற்றமடைந்ததாகவும் கூறினார். மேலும், தனது தந்தை மம்மூட்டியுடன் இணையும் முதல் படமாக லோகா இருக்கும் என்றும் தெரிவித்தார். துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





