“காஞ்சனா – 4” பட அப்டேட்டுக்காக காத்திருந்தவரா நீங்கள்? இதோ உங்களுக்காக…
ஒரு படத்தின் 2 ஆவது பார்ட் எடுப்பதே ஒரு சவாலான விடயம் தான். ஆனால் நம்ம தமிழ் ஹீரோ ஒரு படத்தின் 4ஆவது பார்ட் வரை எடுக்கும் பெறுமையை பெறப்போகின்றார். இதுவரை 3 பார்ட்களை வெற்றிகரமாக எடுத்துவிட்டார்.
இப்போது 4ஆவது பார்ட் பற்றி தான் செய்தி வந்துள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை. நடன மாஸ்டராக, இயக்குனராக, கோரியோ கிராபராக, ரஜினியின் தீவிர ரசிகராக அனைவருக்கும் பரீட்சயமான ராகவா லாரன்ஸ் தான்.
இந்த படமும் அனைவருக்கும் குறிப்பாக சிறியவர்களுக்கு மிகவும் பிடித்த “காஞ்சனா” தான்.
இப்போது காஞ்சனா – 4 திரைப்படத்தின் நடிகர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, காஞ்சனா – 2 படத்தை எடுத்தார். அதுவும் வெற்றியை அடைந்தது.

பின், 2019-ல் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வெற்றிப்படமானது.

தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணை தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் காஞ்சனா – 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது, இப்படத்தின் நடிகர்களை அறிவித்து வருகின்றனர். முக்கியமாக, நடிகர்கள் ஆனந்த் ராஜ், கருடராம், நோரா ஃபதேகி, ஹிமா பிந்து, ஸ்வாக்ஷா ஐயர், தேவ தர்ஷினி உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
மேலும் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவூட் நடிகை நோரா ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.





