செவ்வாயில் மனிதர்கள் உயிர் வாழலாம்! மர்மங்கள் நிறைந்த பல தகவல்கள் கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் மறைந்துள்ள பல மர்மங்கள் நிறைந்த தகவல்களை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் கண்டுபிடித்துள்ளது.
அதற்கமைய, செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ பள்ளத்தில் (Jezero Crater) கண்டுபிடிக்கப்பட்ட 24 வகையான கனிமங்கள், செவ்வாய் கிரகத்தின் கடந்த கால வரலாறு குறித்த ஆச்சரியமிக்க தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளன.
ஒரு காலத்தில் உயிர்கள் வாழத் தகுதியான நீலக் கிரகமாக இருந்த செவ்வாய், காலப்போக்கில் 3 வெவ்வேறு அவதாரங்களை எடுத்துள்ளமை, இந்தக் தரவுகளைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரோவர் அனுப்பிய தரவுகளை ரைஸ் பல்கலைக்கழக மாணவி எலினோர் மோர்லேண்ட் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் இந்தத் தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆரம்ப காலத்தில், செவ்வாய் கிரகம் அதிக வெப்பநிலை, கொதிக்கும் நீர் மற்றும் தீவிரமான அமிலத்தன்மை கொண்ட ஆபத்தான சூழலைக் கொண்டிருந்தது.
எனினும், காலப்போக்கில் ஆபத்தான அமிலம் தணிந்து மிதமான, நடுநிலையான (Neutral) நீராக உருவெடுத்தது. இது உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்தது.
இறுதியாக, செவ்வாய் கிரகம் குளிர்ந்த, காரத்தன்மை (Alkaline) கொண்ட திரவங்களால் நிரம்பி, உயிரினங்கள் செழித்து வளர மிகவும் சாதகமான ஒரு பொற்காலமாக மாறியுள்ளது.
பெர்சவரன்ஸ் ரோவரில் உள்ள சக்திவாய்ந்த ‘PIXL’ (Planetary Instrument for X-ray Lithochemistry) கருவி, பாறைகள் மீது எக்ஸ்-கதிர்களைப் பாய்ச்சி, அவற்றின் வேதியியல் அமைப்பை ஆய்வு செய்து கனிமப் படிவங்களைக் கண்டுபிடித்திருந்தது.
பூமியில் யெல்லோஸ்டோன் போன்ற கொதிக்கும் அமிலச் சூழலிலும் நுண்ணுயிரிகள் வாழும் போது, செவ்வாயில் ஏன் வாழ்ந்திருக்க முடியாது? எனக், ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான கிர்ஸ்டன் சீபாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்காலத்தில் பூமிக்குக் கொண்டு வரப்படவிருக்கும் பாறை மாதிரிகளை எங்கிருந்து சேகரிக்க வேண்டும் என்பதற்கு நாசாவின் ரோவருக்கு ஒரு தையல் வரைபடம் போன்று இந்தக் கண்டுபிடிப்புகள் வழிகாட்டுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





