அபிநய்-யின் உடலை வாங்கக் கூட யாரும் இல்லை..! யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது
கடந்த இரண்டு வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அபிநய் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றுமொரு சோகமான செய்தியும் வந்துள்ளது.
இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், அதில் புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
அபிநய் இறுதி சடங்கு செய்ய, உறவினர்கள் வருகைக்காக அவரது நண்பர்கள் மற்றும் அபிநய்க்கு நெருங்கியவர்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் அவரது உறவினர்கள் யாரும் இல்லை என்றும், பெங்களூரில் இருப்பதால் அவர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்களாம்.
அபிநய் இறப்பு குறித்து அறிந்த பின்னர் தங்களை தொடர்பு கொள்ளும்மாறு நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனினும், யாரும் இறுதிச் சடங்கு செய்ய முன்வராத பச்சத்தில், நடிகர் சங்கமே முன்னின்று இதை நடத்தும் என பூச்சு முருகன் கூறி உள்ளதாக அபிநய் நண்பர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதே போல் அபிநய் மருத்துவமனையில் இறந்துள்ளதால், உறவினர் கையெழுத்து அவசியம் என போலீசார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.






