இலங்கை இளைஞர்களின் மற்றுமொரு படைப்பு “ஒரு வழி பாதை”…
இலங்கை என்றால் முன்னெொரு காலத்தில் உள்நாட்டு யுத்தம் என்பதுதான் நினைவுக்கு வரும்.
ஆனால் தற்போது இலங்கை அதிலிருந்து மீண்டு, வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
இலங்கை இளைஞர்களும், நம்நாட்டுக்கு பெறுமையை தேடித்தந்துகொண்டு இருக்கின்றார்கள்.
வெளிநாட்டு படைப்புகளுக்கு நாம் கொடுக்கும் முன்னுரிமையை நம் நாட்டு கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் இலங்கை இளைஞர்களின் தீவிர முயற்சியால் உருவாகியுள்ள ஒரு பாடலைப்பற்றி பார்ப்போம்.
ஜீவானந்தன் ராம் அவர்களின் இசையில் உருவாகிய “ஒரு வழி பாதை” என்ற பாடல்.
“இது ஒருவழிப்பாத
நீ ஒருத்தனயும் நம்பாத
ஆத்தில அளந்து போடாம
பின்ன Worth இல்லன்னு வெம்பாத
உனக்குன்னு நீ மட்டுந்தான்
இந்த மந்திரத்த மறக்காத
எது வேணும் எட்திட்டு கெளம்பு
சும்மா ஏமாந்து போய் நிக்காத”
என்ற வரிகள் மூலம் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றால் போல தமது திறமைகளால் இந்த பாடலை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த பாடலை வருக் துஷ்யந்தன், எஜேன், MC Ra | ஜீவானந்தன் ராம் இணைந்து எழுதியுள்ளனர்.





