விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் டைட்டில் வெளியானது…
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் தயாரிக்கிறது.
இதில் ஜேஎஸ்கே மீடியா என்பது ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனம். இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், படத்திற்கு ‘சிக்மா’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கூடவே படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதில் பணக்கட்டுகள் மற்றும் தங்கத்திற்கு மேல் சந்தீப் கிஷன் உட்காந்திருப்பது போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 5 visits today)





