முதன்முறையாக நிச்சய மோதிரம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா
குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர்.
இவர் தென்னிந்திய ரசிகர்கள் முதல் பாலிவுட் ரசிகர்கள் வரை கவர்ந்து, நேஷனல் கிரஷ் என பெயரெடுத்தவர்.
இந்த நிலையில் ராஷ்மிகா என்றாலே அங்கு விஜய் தேவரகொண்டாவுடனான காதல் தான் நினைவுக்கு வரும்.
அந்த அளவுக்கு இருவரும் பல சர்ச்சைகளில் சிக்கினர். ஆனால் தமது காதல் சர்ச்சையை இருவரும் மறுக்கவில்லை.
இந்த நிலையில், தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஷ்மிகாவிடம், அவருடைய கையில் இருக்கும் மோதிரம் பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்கு வெட்கத்துடனான புன்னகையுடன் அது மிகவும் முக்கியமான மோதிரம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அந்த மோதிரம் விஜய் தேவரகொண்டாவுடனான நிச்சயதார்த்த மோதிரம் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

(Visited 3 times, 3 visits today)





