கென்யாவில் விமான விபத்து – 12 பேர் பலியானதாக தகவல்!
கென்யாவின் (Kenya) குவாலே (Kwale) கடற்கரைப் பகுதியில் சிறிய விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
மாசாய் மாரா தேசிய சரணாலயத்தை (Maasai Mara National Reserve) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.
விசாரணைகளை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கென்யா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.





