உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ள பெண்! கமலா ஹாரிஸ் வெளியிட்ட தகவல்

அமெரிக்காவின் அரசியல் செயற்பாட்டில் இருந்து தான் விலகவில்லை எனவும், மக்களுக்காக தொடர்ந்தும் பணியாற்றவுள்ளதாகவும் முன்னாள் பிரதி ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்காவில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிடவுள்ளமை வெளிப்படுத்துவதாக BBC  சுட்டிக்காட்டியுள்ளன.

BBC  ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தனது அரசியல் செயற்பாடு தொடர்பான தகவலை கமலா ஹாரிஸ் வெளியிட்டிருந்தார்.

இதன்போது அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்குத் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் கமலா ஹாரிஸ் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பெண் ஒருவர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக, கமலா ஹாரிஸ் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் மீண்டும் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 6 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,