நயன்தாரா – விக்னேஷ் சிவனின் தீபாவளி கொண்டாட்டம்

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.
தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ‘மன ஷங்கர வர பிரசாத் காரு’ படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த வருட தீபாவளிக்கு நடிகர் சிரஞ்சீவி சில நடிகர், நடிகையரை தனது வீட்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு அழைத்திருக்கிறார்.
தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ், நடிகை நயன்தாரா, ஆகியோர் அவரது அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்குச் சென்று தீபாவளி கொண்டாடி உள்ளார்கள். அவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்துள்ளார் சிரஞ்சீவி. அனைவருமே அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தீபாவளி கொண்டாட்டத்தில் நடிகர் ராணா டகுபதி, நடிகை ஸ்ரீலீலா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களை இருவரும் தமது இன்ஸ்டா கிராமில் பதிவிட்டுள்ளனர்.
x