புற்றுநோய் பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள வெற்றி – நீண்டகால பாதிப்பில் இருந்து பாதுகாப்பு!

புற்றுநோய் பரிசோதனைகள் ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது ஏழு மடங்கு பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
புற்றுநோய்களைக் கண்டறிய இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது வழமையான ஒரு நிகழ்வாகும்.
இதன்படி 25000 பேரை கொண்டு நடத்தப்பட்ட இரத்த பரிசோதனை நிகழ்வில் 62 சதவீத புற்றுநோய்கள் சரியாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“ஹோலி கிரெயில்” (Holy Grail) என்று அழைக்கப்படும் இந்த சோதனை, நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு முக்கியமாக இருக்கும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் தேசிய புற்றுநோய் திட்டத்தில் கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படும் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
அறிகுறிகள் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நோய் இருப்பதைக் குறிக்கும் சிறிய அளவிலான கட்டிகள் இரத்தத்தில் இருப்பதை கண்டறிவதன் மூலம் நீண்டகால பாதிப்புகளை தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆய்வில் கலந்துகொண்ட 133 பங்கேற்பாளர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 92 சதவீத வழக்குகளில், புற்றுநோய் எந்த உறுப்பில் ஏற்பட்டது என்பதை இலகுவாக கண்டறிய முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.