300 கோடி வசூல் செய்த ஒரே நடிகை… சினிமாவை விட்டு விலக முடிவு
இந்திய சினிமாவில் சோலோ ஹீரோயினாக நடித்து 300 கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே நடிகை என்ற சாதனையை பெற்றுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.
சமீபகாலமாக மலையாளப் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கேரளா மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மலையாள சினிமா வரலாற்றில் உலகளவில் அதிக வசூலை ஈட்டிய முதல் திரைப்படம் என்ற சாதனையைத் தற்போது லோகா பெற்றுள்ளது.
அதன்படி உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், கேரளாவில் மட்டும் ரூ.100 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் மட்டும் 39 நாட்களில் ரூ.119 கோடியை வசூலித்துள்ளது.
மலையாள சினிமா வரலாற்றில் உலகளவில் அதிக வசூலை ஈட்டிய முதல் திரைப்படம் என்ற சாதனையைத் தற்போது லோகா பெற்றுள்ளது.

அதன்படி உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், கேரளாவில் மட்டும் ரூ.100 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் மட்டும் 39 நாட்களில் ரூ.119 கோடியை வசூலித்துள்ளது.
இதனால், மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படைத்துள்ளது. இந்திய சினிமாவில் வேறு எந்த நடிகையும் சோலோ ஹீரோயினாக இவ்வளவு வசூல் ஈட்டிய திரைப்படத்தைக் கொடுக்கவில்லை. அதனை கொடுத்த ஒரே நடிகையாக கல்யாணி பிரியதர்ஷன் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், சினிமாவை விட்டே விலகும் முடிவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் சென்றாராம். அதனை அவரே ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், “லோகா படத்திற்குப் பிறகு நான் சினிமாவை விட்டுவிடலாமா என்று யோசித்தேன். இனி என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர் கூறினார்.
இந்தச் சாதனையை கொண்டாட வேண்டிய வேளையில் சினிமாவை விட்டே விலகும் முடிவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் சென்றாராம்.
மேலும் கல்யாணி பிரியதர்ஷன் பேசுகையில், “சினிமாவை விட்டு விலகும் முடிவில் என் அப்பாதான் எனக்கு அறிவுரை கூறினார். காரணம், அவரின் ‘சித்ரம்’ படம் தியேட்டரில் 365 நாட்கள் ஓடிய பிறகு, அவர் எல்லாவற்றையும் சாதித்துவிட்டதாக நம்பினார்.
ஆனால், அதன் பிறகு அவர் இயக்கிய ‘கிலுக்கம்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனவே தான், தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் எனக்கு அறிவுரை கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார். தனது தந்தையின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை ஏற்று சினிமாவை விட்டு விலகும் முடிவைக் கைவிட்டதாக கல்யாணி அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.






