என் படத்தில் நீங்கள் இருப்பது ஆசிர்வாதம் – நடிகர் தனுஷ்
ஹீரோவாக மற்றும் இயக்குனராக மிகவும் பிஸியாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். தற்போது தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இட்லி கடை.
மேலும், இவருடன் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரக்கணி, ராஜ்கிரண் என பலர் நடித்துள்ளனர்.

இன்று இப்படம் வெளியாகி உள்ள நிலையில், மேடையில் தனுஷ் ராஜ்கிரண் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” ராஜ்கிரண் சாருக்கு என் குடும்பமே கடமைப்பட்டுள்ளது. என் குடும்பத்திற்கு நன்றி மறக்காத வியாதி இருக்கு. நீங்கள் என் குடும்பத்திற்கு சாமி மாதிரி.

எங்க அப்பாவுக்கு முதல் பட ஹீரோ நீங்க தான். அது போன்று என் முதல் படத்தின் ஹீரோவும் நீங்க தான். என் படத்தில் நீங்கள் இருப்பது ஆசிர்வாதம், மிகவும் நன்றி சார்” என்று தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)





