பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 தலிபான் போராளிகள்!
பாகிஸ்தான் படையினர் தலிபான் போராளிகளின் மறைவிடத்தை கண்டுப்பிடித்து சோதனை நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இதன்போது இரு தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் 17 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஒரு மாவட்டமான கரக்கில் இந்த மோதல் இடம்பெற்றதாகவும் இதில் 03 அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர் அடிக்கடி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாகவும் தேரா இஸ்மாயில் கானில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 13 தலிபான் போராளிகள் உயிரிழந்திருந்தனர்.
சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானில் போராளி வன்முறை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)





