வார் 2 படத்துக்கு மரண பயத்தை காட்டிய கூலி – அமெரிக்காவில் நடந்த சம்பவம்

லோகேஷ் கனகராஜும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், கூலி மற்றும் வார் 2 படங்களின் அமெரிக்க முன்பதிவு நிலவரம் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்த் நடித்த கூலி படத்துக்கு போட்டியாக ஆகஸ்ட் 14ந் தேதி வார் 2 என்கிற பான் இந்தியா படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் ஹீரோயினாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி உள்ளார்.
இப்படத்தினால் கூலி படத்தின் வசூல் பாதிக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், ரிலீசுக்கு முன்பே வார் 2 படத்துக்கு மரண பயத்தை காட்டி இருக்கிறது கூலி திரைப்படம்.
நடிகர் ரஜினிகாந்துக்கு வெளிநாடுகளிலும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் அமெரிக்காவில் அவரது படங்களுக்கு எப்போதுமே மவுசு இருக்கும். அந்த வகையில் கூலி திரைப்படத்திற்கு அங்கு செம டிமாண்ட் உள்ளதாம்.
இப்படத்தின் முன்பதிவு வசூல் மட்டுமே 10 லட்சம் அமெரிக்க டாலர்களை தாண்டிவிட்டதாம். அதேபோல் இப்படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு மொத்தம் 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருக்கிறதாம்.
ஆனால் வார் 2 திரைப்படம் இதுவரை முன்பதிவு மூலம் வெறும் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் தான் வசூலித்துள்ளது. கூலி படத்தோடு ஒப்பிடுகையில் 8 லட்சம் டாலர்கள் கம்மியாக உள்ளது வார் 2 கலெக்ஷன்.
அதுவும் அங்கு வார் 2 படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு தான் அதிகப்படியான டிக்கெட் விற்பனையாகி இருக்கிறதாம். இதன்மூலம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் கூலி சம்பவம் செய்யப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.