வனிதா – ஜோவிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இளையராஜா… Mrs & Mr படத்தின் மீது வழக்கு

பழைய பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்துவது தற்போது ஒரு டிரெண்ட் ஆகவே மாறிவிட்டது.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் இடம்பெற்ற நீ பொட்டு வச்ச தங்க குடம் பாடல் மீண்டும் வைரலாக தொடங்கியது. அதேபோல் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாட்டு இடம்பெற்றது அப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது.
இந்த பாடல்களுக்கெல்லாம் தன்னிடம் அனுமதி வாங்குவதில்லை என்பது இளையராஜா தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டு ஆகும்.
அந்த வகையில் மஞ்சும்மல் பாய்ஸ் தொடங்கி குட் பேட் அக்லி வரை தன்னிடம் அனுமதி வாங்காமல் பாடலை பயன்படுத்தியதாக கூறி இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் தான் வனிதா விஜயகுமார் இயக்கிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் இளையராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் பாடல் ஒன்றையும் முழுவதுமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சிவராத்திரி என்கிற அந்த பாடலை புதுப்பித்து அதை படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.
சிவராத்திரி என்கிற பாடலை கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் படத்திற்காக கம்போஸ் செய்திருந்தார் இளையராஜா. அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான நிலையில், அதேபாடலை மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தி, அதில் ராபர்ட் மற்றும் கிரண் ஆகியோர் மிகவும் கிளாமராக நடனமாடியும் இருக்கின்றனர்.
இந்தப் பாடல் யூடியூப்பில் வெளியானபோது அதில் இளையராஜா பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனாலும் தன்னிடம் அனுமதி வாங்காமல் அப்பாடலை பயன்படுத்தி இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் இளையராஜா.
தன்னிடம் அனுமதி வாங்காமல் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் சிவராத்திரி பாடலை பயன்படுத்தியதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் இளையராஜா. இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
இளையராஜாவின் வழக்கால் வனிதா விஜயகுமார் இயக்கிய முதல் படமான மிஸஸ் அண்ட் மிஸ்டர் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார்.
இப்படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் நடித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இது மக்களிடையே பொதுவாக எதிர்மறை கருத்துக்கள் மற்றும் மற்றும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.