முதன் முறையாக கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படும் இந்திய படம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெற்றிநடை போட்ட “த்ரிஷ்யம்” படத்தை கொரிய மொழியில் எடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் தென் கொரியாவின் அத்தாலஜி ஸ்டுடியோஸ் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை இந்த முடிவை எட்டியுள்ளன.
இது ஒரு இந்திய மற்றும் கொரிய ஸ்டுடியோவுக்கு இடையேயான முதல் கூட்டுப்பணியாகும், மேலும் ஒரு இந்தி திரைப்படம் கொரிய மொழியில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
திரைப்படம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பிரிதுல் குமார் முன்னிலையில் பனோரமா ஸ்டுடியோவின் குமார் மங்கட் பதக் மற்றும் ஆந்தாலஜி ஸ்டுடியோவின் ஜெய் சோய் ஆகியோர் கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்திய பெவிலியனில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இரண்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- “த்ரிஷ்யம்”, ஒரு மலையாள க்ரைம் த்ரில்லர், இது 2013 இல் ஜீத்து ஜோசப்பால் எழுதி இயக்கப்பட்டது. கன்னடத்தில் “த்ரிஷ்யா” (2014)
தெலுங்கில் “த்ருஷ்யம்”. (2014) ,
தமிழில் “பாபநாசம்” (2015) என வெளியானது.
குமார் மங்கட் பதக் ஒரு அறிக்கையில், த்ரிஷ்யம் இன்று விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற உரிமையாக மாறியுள்ளது என்று கூறினார்.