வெற்றி மாறனின் CU-வில் இணைந்த மணிகண்டன்

சிம்பு அடுத்ததாக STR 49,50,51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைப்பெற்றது.
இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு 2 தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். ஒன்று இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்திலும் நடிக்கிறார். படத்தில் குட் நைட் புகழ் மணிகண்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிகண்டன் நடிக்கும் கதாப்பாத்திரம் இப்படத்திலும் வட சென்னை 2 படத்திலும் இடம் பெறும் கதாப்பாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.