விரைவில் ரீ – ரிலீசாகும் மௌனம் பேசியதே…

நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படம் விரைவில் மறுவெளியீடாகுமென தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2002-இல் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்துக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் யுவன்சங்கர் ராஜாவின் பாடல்கள் அனைத்தும் வெளியானபோதிலிருந்தே ரசிகர்களின் மிகவும் பிடித்தமான பாடல்களின் வரிசையில்தான் இருந்து வருகிறது.
அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்காத நிலையில், சூர்யா ரசிகர்கள் இந்தப் பட போஸ்டரை எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
(Visited 2 times, 2 visits today)