ஓடிடியில் வெளியானது தக் லைஃப்…

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இணைந்து நடித்த தக் லைஃப் படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படத்தின் கதை, திரைக்கதை, கமலுக்கு கொடுத்த மிகப்பெரிய பில்டப் மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகா்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்,தக் லைஃப் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படம் திரைக்கு வந்து 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வரும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்த நிலையில், முன்னதாகவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)