ஜெர்மனியில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு நாடு கடத்தப்படும் வெளிநாட்டவர்கள்

ஜெர்மனியின் புகலிட அமைப்பு குறித்த நிச்சயமற்ற நிலை காரணமாக சில அகதிகளை மீண்டும் கிரேக்கத்திற்கு நாடுகடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஜெர்மனி பெருமளவில் நிறுத்தி வைத்திருந்தது.
ஏற்கனவே கிரேக்கத்தில் புகலிடம் கோருபவர்களாக பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜெர்மனிக்கு பயணம் செய்த அகதிகளை நாடு கடத்துவதற்காக ஜெர்மனி இதனை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள், வயதான ஆண்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் போன்றோர் மட்டும் நாடுகடத்தலில் இருந்து விலக்கப்படுவார்கள்.
கடந்த மாதம் 16ஆம் திகதி லீப்ஜிக்கில் உள்ள கூட்டாட்சி நிர்வாக நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கொள்கை மாற்றத்தின் ஒரு பகுதியாக, ஜெர்மனியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட பிறகும் வெளியேற மறுப்பவர்களுக்கு சலுகைக் குறைப்புகளையோ அல்லது முழுமையான இரத்துகளையோ செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நாடுகடத்தல் உத்தரவுகளுக்கு இணங்குவதை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
குறித்த மாற்றம் தற்போது குடியேற்றம், நாடுகடத்தல் மற்றும் அகதிகள் தங்குமிடங்கள் தொடர்பான தேசிய விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.