ஈஸ்டர் ஞாயிறு: இலங்கையில் தேவாலயங்களுக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) ஆகிய நாட்களில் விசேட மத வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாதுகாப்பை அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் அதிக மக்கள் கூடும் தேவாலயங்களை அடையாளம் கண்டு அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு அன்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)