அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் மத்திய வங்கியின் உத்தரவு!

அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடன் பத்திரங்களுக்கு எதிரான பண வரவு வைப்புத் தேவைகள் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி 19 மே 2022 மற்றும் 16 பெப்ரவரி 2023 திகதியிட்ட கடன் பத்திரங்களுக்கு எதிரான பண வரம்பு வைப்புத் தேவைகள் திரும்பப் பெறப்பட்டதாக உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் மத்திய வங்கியின் நாணய சபையினால் மேற்கொள்ளப்பட்ட உத்தரவுகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மீளப் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)