அமெரிக்காவிடம் இருந்து உண்மையான சுதந்திரத்தை அடைய ஜேர்மனியின் தலைவர் உறுதி!

ஜெர்மனியின் தேர்தலின் இறுதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே, அடுத்த அதிபராக வரவிருக்கும் மைய-வலது கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவரான பிரீட்ரிக் மெர்ஸ், அமெரிக்காவுடனான உறவுகளில் ஒரு பெரிய மாற்றத்தை உறுதியளித்தார்.
தேர்தலுக்குப் பிந்தைய விவாதத்தில், டிரம்ப் நிர்வாகம் சுமார் 80 ஆண்டுகால கொள்கையை முறியடிக்கப் பார்க்கிறது எனவும் ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை கைவிடுவதற்கான வாய்ப்பை எழுப்புகிறது என்ற புதிய யதார்த்தத்தை நேரடியாக எதிர்கொள்ளவும் அவர் உறுதியளித்துள்ளார்த.
எனது முழுமையான முன்னுரிமை ஐரோப்பாவை விரைவில் வலுப்படுத்துவதாக இருக்கும், இதனால் படிப்படியாக, அமெரிக்காவிடமிருந்து நாம் உண்மையில் சுதந்திரத்தை அடைய முடியும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)