“பத்து கோடி கொடுத்தால் மீண்டும் அப்படி நடிப்பேன்” சந்தானம்

சுந்தர் சி யின் மதகஜராஜா படம் பழைய சந்தானத்தை தூண்டிவிட்டது. மக்கள் பழையபடி இந்த படத்தில் அவரது கவுண்டர் காமெடிகளை ரசித்து ஆரவாரம் செய்தனர்.
அதில் இருந்து அவரது ரசிகர்களுக்கு பழையபடி அவர் காமெடி பண்ண வேண்டும் என்ற ஒரு ஏக்கம் தோன்றியுள்ளது.
இப்பொழுது சுந்தர் சி மதகஜராஜா கூட்டணியில் மற்றொரு படத்தை எடுக்க திட்டம் போட்டு வருகிறார். இந்த கூட்டணிக்காக எல்லா தயாரிப்பாளர்களும் காத்து கிடக்கிறார்கள்.
இதனால் விஷால், சந்தானம் கூட்டணியில் ஆம்பள படத்தின் இரண்டாம் பாகம் உருவாக கூட வாய்ப்பு இருக்கிறது.
சமீபகாலமாக சந்தானம் ஹீரோவாக நடித்த எந்த படங்களும் கை கொடுக்கவில்லை, குளுகுளு, ஏஜென்ட் கண்ணாயிரம், 80ஸ் பில்டப், வடக்குப்பட்டி ராமசாமி, இங்க என்ன சொல்லுது போன்று ஹீரோவாக நடித்த அத்தனை படங்களும் போஸ்டர் ஒட்டிய காசு கூட கலெக்ட் செய்யவில்லை.
ஹீரோவாக நடிப்பதற்கு சந்தானம் 5 கோடிகள் வரை சம்பளம் வாங்கி வந்தார். இப்பொழுது அவரது காமெடிகளை மக்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர்.
அது மட்டும் இல்லாமல் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் படம் குவிந்து வருகிறது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என ஒரு செக் வைத்துள்ளார் பழைய பார்த்தாவாகிய சந்தானம்.
இப்பொழுது டபுள் மடங்கு அதாவது ஹீரோவாக நடிக்க வாங்கி வந்த சம்பளம் 5 கோடிகளில் இருந்து பத்து கோடி கொடுத்தால் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு திட்டம் போட்டு வருகிறார்.
அவரது இந்த எண்ணத்தை கேள்விப்பட்டதுமே சிம்பு நடிக்க போகும் ஒரு படத்திற்கு அவரை காமெடியனாக புக் பண்ணுவதற்கு அலைமோதி வருகின்றனர்.