IPL Update – இவ்வருட தொடருக்கான முழு அட்டவணை வெளியீடு

இந்தியன் பிரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த IPL மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், IPL 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
மார்ச் 22ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
குவாலிபியர் 1 போட்டி மே 20 ஆம் தேதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
குவாலிபியர் 2 போட்டி மே 23 ஆம் தேதியும் IPL 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக போட்டிகள் நடைபெறும்- அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, லக்னோ, முலான்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் என பத்து இடங்களுடன் கவுகாத்தி மற்றும் தரம்சாலாவிலும் இந்த முறை IPL போட்டிகள் நடைபெற உள்ளது.