தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க உதவும் இயற்கையான பானங்கள்

உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இயற்கையான, எளிய வழியில் உடல் எடையை குறைக்க உதவும் சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும் சில டீடாக்ஸ் பானங்கள் மூலம் உடல் எடையை குறைத்து தொப்பை கொழுப்பையும் (Belly Fat) குறைக்க முடியும். உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி, எளிதாக டீடாக்ஸ் தண்ணீரை தயார் செய்யலாம். உடல் பருமனுக்கு நிவாரணம் அளிக்கும் 5 சிறப்பு டீடாக்ஸ் பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
Cinnamon Water: இலவங்கப்பட்டை தண்ணீர்
எடையைக் குறைப்பதில் இலவங்கப்பட்டை தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் கொழுப்பை எரிக்கும் திறன் அதிகரிக்கின்றது. இதனுடன், இலவங்கப்பட்டை நீர் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. இது மட்டுமல்லாமல், இது செரிமான செயல்முறையை சீராக வைத்திருக்கிறது. இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேராமல் இருக்கும். அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
Barley Water: பார்லி தண்ணீர்
பார்லியில் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. இது மட்டுமல்லாமல், பார்லி தண்ணீரை தொடர்ந்து குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்புக்கு உதவுகிறது.
Fenugreek Water: வெந்தய நீர்
வெந்தய நீர் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். வெந்தயம் உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. இதனால் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இதன் உதவியுடன் உடற்பயிற்சியின் போது அதிக கலோரிகளை எரிக்க முடியும். இதில் நார்ச்சத்தும் உள்ளது. இது வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்ய பயனுள்ளதாக இருக்கும். வெந்தயம் உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதில் உதவுகிறது.
Cucumber Water: வெள்ளரிக்காய் தண்ணீர்
வெள்ளரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் டீடாக்ஸ் நீர் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இது உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை வழங்குவதோடு, செரிமானத்தையும் சீராக்குகிறது. இது மட்டுமல்லாமல், இது உடலுக்கு மற்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் வழங்குகிறது. இதன் காரணமாக உடல் நீண்ட நேரம் உற்சாகத்துடன் இருக்கும். இதில் அதிக அளவு ஆண்டிஆக்சிடெண்டுகள் இருப்பதோடு இதில் கலோரிகளும் மிக குறைவாகவே உள்ளன.