பிக்பாஸ் அடுத்த சீசன் தொகுப்பாளரில் மாற்றமா? விஜய் டிவி வெளியிட்ட அதிசயம்
பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசன் வெற்றிகரமாக நேற்று முடிந்து இருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்று தெரிந்துவிட்டது.
மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசனில் சண்டை கொஞ்சம் கம்மி தான் என்று சொல்லலாம்.
தீபக் மற்றும் மஞ்சரி எலிமினேஷன் ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியை கொடுத்தது. சௌந்தர்யாவின் குழந்தைத்தனம் அனைவரையும் ரசிக்க வைத்தது.
இதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சியின் சுவாரசியம் என்னவென்றால் அது புது தொகுப்பாளர் விஜய் சேதுபதி தான்.
வழக்கம் போல விஜய் சேதுபதியும் இந்த நிகழ்ச்சியின் மூலம் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் என இரண்டையுமே பெற்றார்.
இந்த நிலையில் இந்த ஒரு சீசன் தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என பேசப்பட்டது. இது குறித்து நேத்து பைனல் விழாவின் போது சேனல் ஹிண்ட் ஒன்றை கொடுத்து இருக்கிறது.
நிகழ்ச்சி முடியும் தருணத்தில் விஜய் சேதுபதியின் பயணம் குறித்து வீடியோ வெளியிடப்பட்டது. முடிவில் ஆட்டம் இதோட முடியல, தொடர்கிறது என சொல்லி இருந்தார்.
இதிலிருந்து அடுத்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகிவிட்டது.