EXCLUSIVE : புத்தம் புதிய சீரியல் “சிந்து பைரவி”யில் இருந்து விலகினார் ரவீனா?
சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் என்றால் சன் மற்றும் விஜய் டிவி தான் முன்னணியில் இருக்கிறார்கள்.
இந்த இரண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தான் டிஆர்பியில் டாப்பில் வருகின்றன.
இதனால் போட்டிபோட்டு இரண்டு தொலைக்காட்சியிலும் பழைய தொடர்கள் முடிவுக்கு கொண்டு புத்தம் புதிய தொடர்களை களமிறக்கி வருகிறார்கள்.
தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது.
சீரியலின் பெயர் சிந்து பைரவி, இந்த தொடரில் மௌன ராகம் சீரியல் புகழ் ரவீனா நடித்து வருகின்றார். இதற்கான புரோமோ வெளியாகி பட்டையை கிளப்பியது.
இந்த நிலையில், கதை தொடங்கும் முன்பே இந்த தொடரை விட்டு விலகியுள்ளார் ரவீனா என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 2 times, 1 visits today)