ஜேர்மன் சான்ஸ்லர் ஷால்ஸ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
தம் மீதும் தம் அரசாங்கத்தின் மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீட்டுக்கொள்ளும்படி ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் விடுத்த அறைகூவலை நாடாளுமன்றம் திங்கட்கிழமை (டிசம்பர் 16) ஏற்றுக்கொண்டது.
இதன்மூலம் 2025 பிப்ரவரி 23ஆம் திகதியில் தேர்தல் நடத்தப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடன் விவகாரம் தொடர்பில் சுதந்திர ஜனநாயகக் கட்சி விலகியதைத் தொடர்ந்து, கடந்த மாதம் பிரதமர் ஷோல்சின் மூன்று கட்சிக் கூட்டணி முறிந்தது. ஜெர்மனியில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் வேளையில், பிரதமர் ஷோல்சின் Social Democrats கட்சிக்கும் Greens கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
1930களில் பாசிசத்தின் எழுச்சிக்கு வழிவிட்ட நிலையற்றத்தன்மையைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட விதிகளின்கீழ், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிரதமர் அழைப்பு விடுத்து, அதில் தோற்றால் மட்டுமே அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மையரால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை அறிவிக்க முடியும்.
புதிய அரசாங்கம் அமையும் வரை இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் ஷோல்ஸ், 2022ல் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட பொருளியல், பாதுகாப்பு நெருக்கடியை தாம் கையாண்டதாகக் கூறி தமது ஆட்சியைத் தற்காத்துப் பேசினார்.
இரண்டாவது தவணைக்காலம் வழங்கப்பட்டால், பழமைவாதக் கட்சியினர் விரும்பிய செலவினக் குறைப்புக்குப் பதிலாக ஜெர்மனியின் உள்கட்டமைப்பு வசதிகளில் தாம் அதிக முதலீடு செய்யப்போவதாக ஷோல்ஸ் கூறினார்.
“குறுகிய கண்ணோட்டம் கொண்டிருந்தால் குறுகிய காலத்தில் பணத்தை சேமிக்கக்கூடும். ஆனால் நமது எதிர்காலத்திற்கு விட்டுச்செல்லும் கடன் கட்டுப்படியாகாது,” என்றார் ஷோல்ஸ்.
இதற்கு முந்திய கூட்டணி ஆட்சியின்போது நான்கு ஆண்டுகளுக்கு நிதி அமைச்சராக இருந்த அவர், 2021ல் பிரதமரானார்.