நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார் கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் திருமண புகைப்படங்கள்
தென்னிந்திய திரையுலகில், பல இளம் ஹீரோக்கள் ஜோடி போட ஆசைப்படும் கதாநாயகிகள் லிஸ்டில், முன்னணி இடத்தில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலரான, ஆண்டனி தட்டில் என்கிற பிஸ்னஸ் மேக்நெட்டை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த மாதம் திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த போது, தன்னுடைய திருமணம் குறித்த தகவலை கீர்த்தி உறுதி செய்தார்.
கீர்த்தி சுரேஷின் காதலர் ஆண்டனி தட்டில் ஒரு கிறிஸ்தவர் என்பதால், இவர்களின் திருமணம் கிருத்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி ஆண்டாளாக மாறி, ஆண்டனிக்கு கழுத்தை நீட்டியுள்ள வெட்டிங் போட்டோஸ் தான் வைரலாகி வருகிறது.
கீர்த்தி – ஆண்டனி தட்டில் திருமணம் கோவாவில் நடந்திருந்தாலும்… பிராமண முறைப்படி கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற பட்டு சேலையில் ஆண்டாள் வேடத்தில் இருக்க, அவருக்கு மாப்பிள்ளை ஆண்டனி தட்டில் நெற்றியில் திருநாமம் போட்டு, பட்டு வேஷ்டியில் தாலி கட்டியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் உட்பட சில முக்கிய திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தற்போது கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமண புகைப்படங்களை வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.