உக்ரேனியப் படைகளுடன் இணைந்து போரிட்ட பிரிட்டிஷ் நபர் பிடிப்பட்டார்
உக்ரேனியப் படைகளுடன் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்ட பிரிட்டிஷ் நபர் பிடிப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.இத்தகவலை ரஷ்ய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வெளியிட்டது.
“பிடிப்பட்டவரின் பெயர் ஜேம்ஸ் ஸ்காட் ரைஸ் ஆண்டர்சன் என்று நம்பப்படுகிறது. அவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். தற்போது அவர் ஆதாரங்களைத் தருகிறார்,” என்று ரஷ்யா தெரிவித்தது.
தாடியுடன் காணப்பட்ட இளம் நபர் தமது பெயர் ஜேம்ஸ் ஸ்காட் ரைஸ் ஆண்டர்சன் என்றும் இதற்கு முன்பு தாம் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேவையாற்றியதாகவும் கூறுவதைக் காட்டும் காணொளி ரஷ்ய ஆதரவு டெலிகிராம் ஒளிவழிகளில் பதிவேற்றம் செய்யபட்டது.அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததைக் காணொளியில் பார்க்க முடிந்தது.
காணொளியின் நம்பகதன்மையையும் ரஷ்ய ஊடகம் வெளியிட்ட செய்தியையும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்றும் தெரியவில்லை.
இதுகுறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
பிடிப்பட்ட நபரின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு செய்து வருவதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.