டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த வத்திக்கான் வெளியுறவுத்துறை செயலாளர்
வாடிகனின் வெளியுறவுத்துறை செயலாளர் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் “போர்களை முறியடிக்க அவருக்கு அதிக ஞானம் கிடைக்க வேண்டும்” என்று ரோமில் நடந்த நிகழ்ச்சியின் போது வெளியுறவுத்துறை செயலாளர் கார்டினல் பியட்ரோ பரோலின் தெரிவித்துள்ளார்.
“உலக போர்களை முடிவுக்குக் கொண்டுவர, நிறைய பணிவு தேவை, குறிப்பிட்ட நலன்களில் கவனம் செலுத்துவதை விட மனிதகுலத்தின் பொதுவான நலன்களைத் தேடுவது உண்மையில் அவசியம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்க சமூகத்தில் பிளவுகளை போக்க, ட்ரம்ப் “முழு நாட்டின் அதிபராக” இருப்பார் என்று தான் நம்புவதாக பரோலின் குறிப்பிட்டார்.
அவர் “உலகில் இரத்தக்களரியாக இருக்கும் தற்போதைய மோதல்களில் பதற்றத்தை குறைக்கும் ஒரு காரணியாக” இருப்பார் என்றும் அவர் நம்பினார்.
போப் பிரான்சிஸ் தேர்தல் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.