ஐரோப்பா செய்தி

லண்டனில் ஒரே நாளில் ஒரே இடத்தில் நடந்த 100 திருமணங்கள் – 100 பவுண்டில் முடிந்த செலவு

லண்டனில் உள்ள புகழ்பெற்ற Old Marylebone நகர மண்டபத்தின் 100ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட அங்கு ஒரே நாளில் 100 திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

100 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் அங்கு நடைபெற்றுள்ளன. ஹாலிவுட் பிரபலங்கள் பலர் அங்குத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

சிலரின் இரண்டாம் திருமணமும் அதே மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிலையில் மண்டபத்தின் 100ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட அங்கு ஒரே நாளில் 100 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளது.

சில இளம் தம்பதியர் அவர்களின் பெற்றோர் திருமணம் செய்துகொண்ட அதே இடத்தில் மணம் முடிக்க விரும்பினர்.

அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தின் முக்கிய நாளன்று திருமணம் செய்துகொண்டதில் மகிழ்ச்சி என்று பலர் கூறினர்.

100 பவுண்டு செலுத்தித் தம்பதியர் திருமணம் செய்துகொண்டனர். வழக்கமாகச் செலுத்தும் கட்டணத்தைவிட அது மிகவும் குறைவாகும்.

(Visited 27 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி