உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலை உயர்வு : அமெரிக்காதான் காரணமா?
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக எண்ணெய் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.
இந்நிலையில் இதற்கு அமெரிக்காவின் விவாதம் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது ஈரானிய எண்ணெய் ஆலைகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு உதவுவது தொடர்பில் ஜனாதிபதி ஜோ பைடனிடம் நிரூபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், அது தொடர்பில் விவாதித்து வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்தே எண்ணெய் விலைகள் 05 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் உலகின் ஏழாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது மற்றும் அதன் உற்பத்தியில் பாதியை வெளிநாடுகளுக்கு முக்கியமாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.
கச்சா எண்ணெய் விலை இப்போது 10% உயர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது, இது ஒரு பீப்பாய்க்கு £59 ஆக உள்ளது.