தளபதி 69 படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை… அட இவங்களா?
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை தெரிவித்தபோது தமிழ் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கப்போவதாக அறிவித்தார். இதனால் இவரது 69வது படம் இவரது கடைசிப் படமாக மாறிவிட்டது.
இந்தப் படத்தினை ஹெச். வினோத் இயக்கவுள்ளார். இந்நிலையில் நேற்றில் இருந்து அதாவது, அக்டோபர் முதல் தேதியில் இருந்து, படத்தில் யாரெல்லாம் விஜய் உடன் நடிக்கின்றார்கள் என்ற, அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில் படத்தில் நடிகை மமிதா பைஜு நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் ஏற்கனவே, தளபதி 69 படத்தில் பாபி தயாள் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய இரண்டாவது அறிவிப்பில் மமிதா பைஜு நடிக்கின்றார் என்ற தகவலை படக்குழு வெளிட்டுள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளும் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.