இலங்கை: காணாமல் போன கணவன் மற்றும் குழந்தையை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்
நீர்கொழும்பில் இருந்து காணாமல் போன ஒரு ஆண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குழந்தையின் தாயார் செய்த முறைப்பாட்டிற்கு அமைய நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முறைப்பாட்டின்படி, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் பெண்ணின் 41 வயது கணவரும் 02 வயது மகளும் காணவில்லை.
காணாமல் போன தந்தை மற்றும் மகள் பற்றிய தகவல்களை அறிந்த பொதுமக்கள் 071 8591630 மற்றும் 031 2222222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)