அபராதத்தை கட்டாத சொகுசு காரில் வந்த விஜய்… புதுசு புதுசா கிளம்புது

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி அறிமுக விழாவிற்கு அபாரதம் கட்டாத சொகுசு காரில் விஜய் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் பயணித்த TN 37 DR 1111 என்ற காருக்கு 4,700 ரூபாய் அபராதத் தொகை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
TN 37 DR 1111 என்ற கார் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய நிலையில் அனைத்து குற்றங்களுக்காவும் மொத்தமாக 4,700 ரூபாய் அபராதத் தொகை நிலுவையில் உள்ளது.
சம்பந்தப்பட்ட TN 37 DR 1111 என்ற டொயோட்டோ இனோவா கிறிஸ்டா கார் கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அபராதம் கட்டாத காரில் கொடி அறிமுக விழாவிற்கு விஜய் வந்துள்ளார் என்பது தற்போது ஊடகங்களில் முக்கிய செய்தியாக மாறியுள்ளது.
(Visited 15 times, 1 visits today)