பாக்கியலட்சுமி ‘கோபி”க்கு சூனியம் வைப்பதாக மிரட்டல் விடுக்கும் பெண் – பரபரப்பு புகார்

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு சூனியம் வைத்து விடுவதாக மிரட்டல் விடுத்த பெண்மணி குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சீரியல் நடிகரின் வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை வைத்து மிரட்டல் விடுத்ததாக புகார்.
சென்னை திருவான்மியூரில் வசித்து வருபவர் சதீஷ்குமார். பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் ஹீரோ கோபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்
கடந்த 2023ல் ஆறுபடை முருகன் கோயிலுக்கு சென்ற போது சதீஷ்குமார் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள குறித்த பெண்மணி விருப்பம் தெரிவித்திருந்தார்.
எனினும் புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்ததால் செல்போனில் தொடர்புகொண்டு தொடர் மிரட்டல் விடுப்பதாக சதீஷ்குமார் கொடுத்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 37 times, 1 visits today)