சூர்யா தந்த பர்த்டே ட்ரீட்… கங்குவா படத்தின் ஃபயர் சாங் ரிலீஸ் ஆனது
																																		நடிகர் சூர்யா நடிப்பில் படு பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிவா இயக்கி உள்ளார். முதன்முறையாக வரலாற்று கதையம்சம் கொண்ட ஃபேண்டஸி திரைப்படத்தை இயக்கி உள்ளார் சிவா. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.
வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி கங்குவா திரைப்படம் திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கங்குவா படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் அப்படத்தின் அப்டேட்டும் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளது. அதன்படி கங்குவா திரைப்படத்தின் நாயகன் சூர்யாவின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது. ஃபயர் சாங் என பெயரிடப்பட்டுள்ள அப்பாடல் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டு உள்ளது.
        



                        
                            
