இந்தியன் – 2 டிரைலர் திகதி அறிவிப்பு – மக்களே ரெடியா?

1996ம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வெளியான படம் இந்தியன்.
ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதோடு படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ஹிட் தான்.
இந்தியன் 2 கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 அறிவிப்பு வந்தது.
அதில் இருந்தே படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என பலர் நடிக்கும் இப்படம் வரும் ஜுலை 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
ஏற்கெனவே படத்தின் இசை வெளியீடு நடந்து முடிந்துள்ள நிலையில் படத்தின் டிரைலர் வரும் ஜுன் 25ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
(Visited 30 times, 1 visits today)