புதிய தேனீக்களை கண்டுப்பிடித்த இலங்கை ஆய்வாளர்!
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20,000 வகையான தேனீக்கள் உள்ளன, அவற்றில் 10 சதவீதம் மட்டுமே தேனை உருவாக்குகின்றன.
மீதமுள்ள தேனீக்கள் மோனோசியஸ் மகரந்தச் சேர்க்கை தேனீக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இலங்கையை சேர்ந்த ஆய்வாளர் திலின ஹெட்டியாராச்சி தனது ஆராய்ச்சியின் மூலம் தேன் அல்லாத மகரந்தத்தை சார்ந்துள்ள மூன்று வகையான தேனீக்களை அடையாளம் கண்டுள்ளார்.
கனடாவில் உள்ள மனிடோபா பல்கலைக்கழக முதுகலை உதவித்தொகை
இந்த கண்டுபிடிப்புகள் வட அமெரிக்காவில் உள்ள லாசியோகுளோசம் (லேசியோக்ளோசம்) இனத்தின் தேனீ மாதிரிகளை ஆய்வு செய்த போது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வகை தேனீக்களின் உடல் உலோக அமைப்பைக் கொண்டிருப்பதால் Lasioglossum dilisena (பிரகாசிக்கும் Lasioglossum) என்ற பெயரை திலினா பரிந்துரைத்தார்.
டிலினாவின் பேராசிரியர் ஜேசன் கிப்ஸும் உச்சரிப்பின் எளிமை காரணமாக “திலிசேனா” என்ற பெயரில் ஆர்வம் காட்டியுள்ளார்.
மானிடோபா பல்கலைக்கழகத்தில் திலினாவின் ஆராய்ச்சியை மேற்பார்வையிடும் பேராசிரியர் ஜேசன் கிப்ஸ், இந்த தேனீக்களுக்கு பிற மொழிகளில் பெயர் வைப்பதும் சுவாரசியமானது என்கிறார்.