பாகிஸ்தானில் போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் : 02 பேர் பலி!
பாகிஸ்தானின் வடமேற்கில் துப்பாக்கிதாரிகள் பதுங்கியிருந்து போலீஸ் வாகனம் மீது நடத்திய தாக்குதலில் 02 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2022 நவம்பரில் மத்திய அரசுடன் பாகிஸ்தான் தலிபான் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை முடித்ததில் இருந்து, ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திடீர் தாக்குதல் நடந்துவருகின்றது.
இந்த மாகாணம் தீவிரவாதக் குழுவின் முன்னாள் கோட்டையாகும்.
லக்கி மார்வாட் மாவட்டத்தில் ஒரு துணை கண்காணிப்பாளர் மற்றும் கான்ஸ்டபிளை தாக்குத்தல்தாரிகள் சுட்டுக் கொன்றதாக போலீஸ் அதிகாரி தாரிக் கான் கூறினார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புகள் சம்பவ இடத்திற்கு வந்தன, ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் எத்தனை பேர் என்று கான் கூறவில்லை.
மாவட்டத்தைச் சேர்ந்த போராளித் தளபதியான உமர் மர்வாத், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார், மேலும் துணைக் கண்காணிப்பாளர் அந்தப் பகுதியில் TTPக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த தாக்குதல் குறித்து TTP செய்தி தொடர்பாளர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.