’96’ பார்ட் 2 கதையை கேட்டு 5 பவுன் தங்கத்தை அள்ளிக்கொடுத்த தயாரிப்பாளர்

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோரது நடிப்பில் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் 96.
இந்தப் படம் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி உள்ளார் இயக்குனர் பிரேம் குமார். ஆனால், முதல் பாகத்தை போல் இந்த படம் ஒரு காதல் கதையாக இருக்காது என ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
96 படத்தின் 2ஆம் பாகத்திற்கான கதையை கேட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கதையை கேட்ட அடுத்த நாளே இயக்குநரை அழைத்து அவருக்கு 5 பவுன் தங்க நகையை பரிசாக கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்படியொரு கதையை கேட்டதே இல்லை என்றும், இந்தப் படம் ஹிட் படமாக அமையும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் பிரேம் குமார் 96 படம் மட்டுமின்றி, ஜானு என்ற தெலுங்கு படத்தையும் (96 ரீமேக்), மெய்யழகன் படத்தையும் இயக்கியிருக்கிறார். மெய்யழகன் படம் பெரியளவி ரீச் கொடுக்கவில்லை என்றாலும், கலவையான விமர்சனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடிய விரைவில் 96 படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி தான் இந்த படத்திலும் நடிக்க உள்ளாரா? என்பது பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.