75000 ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டை ஓட்டை ஒட்டி மீள் வடிவமைத்த ஆய்வாளர்கள்!
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 75,000 ஆண்டுகள் பழமையான நியண்டர்டால் எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டை ஒன்றாக இணைத்து பெண்ணின் வடிவத்தை கொண்டுவந்துள்ளனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லிவர்பூல் ஜான் மூர்ஸின் ஆராய்ச்சியாளர்கள் ஈராக்கின் பாக்தாத்திற்கு வடக்கே 500 மைல் தொலைவில் உள்ள ஷானிதர் குகை தளத்தில் இந்த மண்டை ஓடு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு புதிய Netflix ஆவணப்படமான சீக்ரெட்ஸ் ஆஃப் தி நியாண்டர்டால்ஸின் ஒரு பகுதியாக, இந்த மண்டை ஓடு ஒட்டப்பட்டு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மண்டை ஓடு முதன்முதலில் 2018 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அது அதிகளவில் சேதமடைந்திருந்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை பாறைகள் விழுந்து அந்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும், அதனால் மண்டை ஓடு சேதமடைந்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த எலும்புக்கூட்டிற்கு ஷானிடர் Z என்று பெயரிட்டுள்ளனர்.
மண்டை ஓட்டை மீண்டும் உருவாக்க அவர்கள் 200 க்கும் மேற்பட்ட எலும்பு துண்டுகளை கையால் ஒன்றாக இணைக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.