உணவின்றி தவிக்கும் 75 இலட்சம் மக்கள்!
இந்த நாட்டில் சுமார் 75 இலட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக பேரதானை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில மாகாணங்களில் சுமார் 88 வீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் உணவுப் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)