பொழுதுபோக்கு

இலங்கையில் ஒரு நைட்டுக்கு 70,000 ரூபாயை காலி பண்ணிய பூஜா ஹெக்டே

தளபதி விஜயுடன் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் நடித்து அசத்திய நடிகை பூஜா ஹெக்டே, அவருடைய 69வது மற்றும் இறுதி திரைப்படமான தளபதி 69 படத்திலும் நடிக்கவுள்ளார்.

இப்பொது அந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் நடக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பூஜா ஹெக்டே தனது 34வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இந்த பிறந்தநாளை சிறந்ததாக மாற்ற இலங்கையில் உள்ள பிரபல இடத்தில் செம சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதுகுறித்த ஒரு பதிவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது 34வது பிறந்தநாளை கொண்டாட அவர் இலங்கையில் உள்ள ஒரு பிரபலமான ரிசார்டுக்கு சென்றுள்ளார். Wild Coast Tented Lodge என்ற இடத்தில் தான் அவர் தனது பொழுதை கழித்துள்ளார்.

வைல்ட் கோஸ்ட், கட்டடக்கலை அதிசயம் நிறைந்த ஒரு இடமாகும். இந்த ரிசார்ட் முற்றிலும் மூங்கிலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த ரிசார்ட் பகுதியை சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் பல உள்ளன. அதன் அழகிய சுற்றுப்புறங்கள், அமைதியான சூழ்நிலை, ஸ்பாவில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகள் என்று அதில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது.

See also  “அந்த செய்தி உண்மை தான்...” முதன்முறையாக மனம் திறந்து பேசிய ஜெயம் ரவி

இலங்கை என்றாலே எழில் கொஞ்சும் இடங்கள் பல உள்ளது, அதிலும் குறிப்பாக இந்த ரிசார்டில் தங்குபவர்களுக்கு யாலா தேசிய பூங்காவின் இயற்கைக் காட்சிகளைக் காண ஒரு அற்புதமான வாய்ப்பும் கிடைக்கும்.

அதுமட்டுமல்ல உங்கள் தங்கும் விடுதிக்கு வெளியே உள்ள விலங்குகளுடனும் கூட உங்களால் ஒரு அற்புதமான சந்திப்பைப் பெற முடியும். ஒரு அற்புதமான சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டு இரவு நேரத்தை இங்கு கழிக்க ஓர் இரவுக்கு 65,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. அப்படி ஒரு இடத்தில், ஒரே இரவுக்கு 70,000 செலவு செய்து அசத்தியிருக்கிறார் பூஜா.

(Visited 3 times, 3 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content