இந்தோனேசியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட 65 மாணவர்கள்
கிழக்கு ஜாவாவின் சிடார்ஜோ நகரில் உள்ள இந்தோனேசிய நகரமான சிடார்ஜோவில் ஒரு பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் 12 மணி நேரமாக சிக்கியுள்ளதாகவும், மாணவர்களை மீட்க அவசரகால குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
கான்கிரீட் தளங்களுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஒக்ஸிஜன் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
குறைந்தது ஒருவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், இறந்தவர்களின் அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.





